வவுனியாவில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!!

938


வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது பிரதமர் தினேஸ் குணவர்த்தன தலைமையில் நடைபெற்றது. வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (01.11) குறித்த கூட்டமானது இடம்பெற்றது.இதன்போது வனஇலாகாவிடம் இருந்து காணி விடுவிப்பு மற்றும் நிலப்பயன்பாடு, மாவட்ட கல்வி நிலை, பிறப்பு பதிவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோதரராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன்,


வடமாகாண ஆளுனர் பி.எச்.எம். சாள்ஸ், வடமாகாண பிரதம செயலாளர் சமன்பந்துல சேன, வவுனியா அரசாங்க அதிபர் சரத் சந்திர மற்றும் அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


மேலும் வவுனியா மாநகரசபைக்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பனம் செய்யும் நிகழ்வும் வவுனியா மாநகரசபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தமையுடன் இணையத்தளத்தினை பிரதமர் தொடக்கி வைத்திருந்தார்.