தென்னிலங்கையில் மாயமான யுவதி : தாயிற்கு வந்த தொலைபேசி அழைப்பு!!

850


தென்னிலங்கையில்..ஹிக்கடுவ பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.கடந்த 15ஆம் திகதி முதல் 18 வயதுடைய யுவதியொருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.காலி தொடம்துவ பிரதேசத்தில் வசிக்கும் யுவதி அன்றைய தினம் காலி பிரதான பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்தார்.இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் பொதுமக்கள் தமக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.“கடந்த 17ஆம் திகதி இரவு 9.28 மணிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.. என் மகள் தான் அழைப்பு எடுத்தார்.
தயவு செய்து என்னைத் தேடாதீர்கள் அம்மா.. என்னால் வரமுடியாமல் போகும். பொலிஸாரிடம் போக வேண்டாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.அதே நேரத்தில் அங்கிருந்த ஒரு பெண் என்னிடம் பொலிஸாரிடம் செல்ல வேண்டாம் என என்னிடம் கூறியதாக தாயார் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.