பொகவந்தலாவ – கல்கந்த தோட்டத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை நேற்று (22.06) ஞாயிற்றுக்கிழமை காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
66 வயதான முனியாண்டி என்பரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சனிக்கிழமை இரவு பிறந்த தின நிகழ்வு ஒன்றிற்கு சென்று வீடு திரும்பிய நபர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
தற்கொலை செய்து கொண்ட நபருக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாகவும் இதில் ஒரு மனைவி தொழில் நிமித்தம் கொழும்பில் தொழில் புரிந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எனவே தற்கொலை செய்து கொண்டவரின் வீட்டில் இருந்து கடிதம் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சடலம் பொகவந்தலாவ வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கபட்டுள்ளதோடு இன்று திங்கட்கிழமை சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






