கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து விபத்து : பலருக்கு நேர்ந்த நிலை!!

3055

மன்னாரில்..

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



குறித்த சொகுசு பேருந்து வேகமாக மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது புத்தளத்தில் சாரதியின் கட்டுப்பட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.படுகாயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளமையினால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.