வவுனியாவில் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு!!

774

Seminar

வவுனியா தெற்கு வலய உயர்தர மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்துவதற்கு டயலொக் நிறுவனத்தின் அனுசரணையுடன் மேற்படி செயலமர்வு வவுனியா நகர சபை மண்டபத்தில் 23.06.2014 தொடக்கம் 26.06.2014 வரை நடை பெறவுள்ளது.

23,24,ஆகிய இரு நாட்களும் பொருளியல் பாட கருந்தரங்கும் 25 ம் திகதி கணக்கீடு பாடகருத்தரங்கும் 26 ம் திகதி பௌதிகவியல் பாட கருத்தரங்கும் நடை பெறவுள்ளது.

இக்கருத்தரங்கை பல்கலைகழக விரிவுரையாளர்கள் சிரேஷ்ட வளவாளர்கள் இணைந்து நடாத்தவுள்ளனர். மேற்படி கருத்தரங்கில் உயர்தர மாணவர்கள் பங்கு பற்றி பயன் பெறுமாறு வவுனியா தெற்குவலய கல்வி பணிப்பாளர் திருமதி செ.அன்ரன் சோமராஜா அறிவித்துள்ளார்.