பல்லியாக மாறிய சிறுவன்!!

614

கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த சிறுவன் இக்தியோலிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.

கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த ஜசுலன் கொர்கன்பெக் (5) என்ற சிறுவனுக்கு வழக்கத்திற்கு மாறாக மரபணு உள்ளதால் இக்தியோலிஸ் என்ற நோய் வந்துள்ளது.

இவருக்கு காது மற்றும் முகம் மற்றும் கால், கை என உடம்பு முழுவதும் உள்ள தோல்கள் கடுமையாகவும், செதில்கள் போலும் உள்ளது. இவரை பல்லி மனிதன் என பலர் குறிப்பிட்டாலும், இக்தியோலிஸ் என்பது மீன்கள் மேல் உள்ள செதில்களையே குறிக்கின்றது.

தற்போது இவர் சிகிச்சைக்காக, குழு ஓன்று நிகழ்ச்சிகள் பல நடத்தி £24,000 நிதி திரட்டி கொடுத்துள்ளது. இதனை அடுத்து ஜசுலன் இஸ்ரேல் நாட்டிற்கு சிகிச்சைக்காக செல்ல உள்ளார்.

இதுகுறித்து ஜசுலன் கூறுகையில், நான் பல்லி மனிதனாக வாழ விரும்பவில்லை எல்லோரையும் போல் சாதாரண வாழ்க்கை வாழ விரும்புகிறேன் என்று கூறியுள்ளான்.

B1 B2