மலேசிய விமான கடத்தல் தலைமை விமானியின் சதியா : விமானத்தில் நீடிக்கும் மர்மம்!!

625

flight

மலேசிய விமானம் மாயமானதற்கு அதன் தலைமை விமானி காரணமாய் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடந்த மார்ச் 8ம் திகதி கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பிஜீங் சென்ற MH370 விமானம் திடீரென நடுவானில் மாயமானது.

இதனையடுத்து இந்திய பெருங்கடலில் விழுந்ததாக மலேசிய அரசு கூறியதன் பேரில் சர்வதேச நாடுகளான அமெரிக்க, பிரிட்டன், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பூளூபென் நீர்மூழ்கி கப்பலின் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. ஆனால் அங்கு விழுந்தது ஏதும் விமானத்தின் பாகங்கள் இல்லை என பின்பு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், அந்த விமானம் கடத்தப்பட்டதா, அதில் விமானிக்கு தொடர்பு உள்ளதா, தீவிரவாதிகளின் நாசவேலையா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் புலனாய்வு அமைப்பினர் நடத்திய விசராணையில் மனித தவறுகளே விமானம் மாயமானதற்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அவ்வாறு மனித தவறுகள் தான் சம்பவத்திற்கு காரணமாக இருந்தால் அது விமானத்தின் தலைமையை விமானியே காரணமாக இருக்கும் என்று பொலிசார் சந்தேகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.