இளம் மனைவியை கொலை செய்த கணவனின் விபரீத முடிவு : ஆதரவற்ற நிலையில் பிள்ளைகள்!!

993

இலங்கையில்..

களுத்துறை மாவட்டம் – அளுத்கம பிரதேசத்தில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் அதே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இந்த சம்பவம் நேற்று மாலை (04-11-2023) அளுத்கம – தன்வத்தகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.



இச்சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு 32 வயது மற்றும் அவரது கணவருக்கு 38 வயதாகின்றது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மனைவியின் தலையில், கணவன் அடித்துள்ளார்.பலத்த காயம் அடைந்த பெண் கீழே விழுந்ததை அடுத்து, கணவர் வீட்டின் முன் அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக தெரிய வருகிறது.

உயிரிழந்த தம்பதிக்கு 12, 10 மற்றும் 6 வயதுடைய மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.இந்த சம்பவம் நடந்த போது கடைசி மகன் மட்டுமே வீட்டில் இருந்துள்ளார்.குறித்த பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக நோய் காவு வண்டி ஒன்று வந்துள்ளது.

இருப்பினும், அவர் உயிரிழந்தமை தெரிந்து கொண்ட ஊழியர்கள் சடலத்தை எடுக்காமல் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த திடீர் மரணங்கள் தொடர்பில் அளுத்கம பொலிஸார், களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், நீதவானின் விசாரணையும் நடத்தப்பட உள்ளது.