காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்.. விரக்தியில் காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை!!

454


மதுராந்தகத்தில்..மதுராந்தகம் அருகே நர்சிங் மாணவி, காதலனுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கரிப்பாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகர். இவருடைய மகன் அருண் (வயது 22).கடந்த 6 ஆண்டுகளாக மதுராந்தகத்தில் உள்ள வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில் வேலை செய்து வந்தார். மதுராந்தகம் அருகே உள்ள புதுமாம்பாக்கத்தில் ஜனனி பிரகாஷ் என்பவர் வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார்.
மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணி. இவருடைய மகள் ஜனனி (17). தனியார் கல்லூரி யில் நர்சிங் படித்து வந்தார். அருண் ஜனனி இருவரும் காதலித்து வந்த தாக கூறப்படுகிறது.


இவரது காதலுக்கு இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விரக்தியடைந்த அருண், தான் தங்கி இருந்த வீட்டில் காதலி ஜனனியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அருண், ஜனனி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கு தை பார்த்த வீட்டின் உரிமையாளர் மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் தெரி வித்தார். போலீசார் இருவரது உட லையும் கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக மதுராந்தகம் மருத்துவமனைக்கு அரசு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.