வெளியே போன கணவர்.. வீட்டில் தனியாக இருந்த பெண் உயர் அதிகாரி கொலை!!

570

பெங்களூரில்..

கர்நாடக மாநிலம் பெங்களூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் அதிகாரி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



கர்நாடக மாநில அரசின் சுரங்க மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குனராக பிரதிமா என்ற பெண் அதிகாரி பதவி வகித்து வந்தார். 45 – வயதான பிரதிமா, தனது கணவர் மற்றும் மகனுடன் பெங்களூர் நகரம் சுப்ரமணியபோரா பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். சுமார் 8 வருடங்களாக அங்கு வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு பிரதிமாவின் கணவரும் மகனும் சிவமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி பகுதிக்கு சென்றுள்ளனர். வீட்டில் பிரதிமா மட்டும் தனியாக இருந்துள்ளார்.

நேற்று இரவு, பிரதிமாவின் சகோதரர் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு இருக்கிறார். பலமுறை முயற்சித்தும் பிரதிமா போனை எடுக்கவில்லை. இதனால், பதறிப்போன சகோதரர் இன்று காலை பிரதிமாவை காண நேரடியாக அவரது வீட்டிற்கே வந்தார்.

அப்போது உடலில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்த நிலையில், பிரதிமா கிடந்தார். அவரது சடலத்தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து சகோதரர் உடனடியாக காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த காவல் துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தடயவியல் துறையினரும் பிரதிமாவின் வீடு மற்றும் அருகில் உள்ள இடங்களில் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரை இந்த கொலை சம்பவம் அதிர வைத்துள்ளது. இது குறித்து பெங்களூர் நகர தெற்கு டிவிஷன் டிசிபி ராகுல் குமார் ஷகாபுர்வத் கூறுகையில், “வழக்கம் போல நேற்று இரவு 8 மணிக்கு பிரதிமா வீட்டிற்கு வந்துள்ளார்.

அவரை வீட்டில் கார் டிரைவர் டிராப் செய்து விட்டு போயுள்ளார். நேற்று இரவு பிரதீமாவுக்கு போன் செய்து பார்த்த அவரது சகோதர் இன்று காலையும் போன் பண்ணி பார்த்துள்ளார். ஆனால், பிரதிமா பதில் எதுவும் அளிக்காதாதால் விட்டிற்கு வந்துள்ளார்.

அப்போதுதான் பிரதிமா கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மர்ம கொலை சம்பவத்தில் உண்மையில் என்ன நடைபெற்றது என்பது குறித்து தெரியவந்ததும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்” என்றார். கர்நாடகாவில் பெண் உயரதிகாரி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெறும் என்றும் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதி கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.