காதலனால் கொல்லப்பட்ட பட்டதாரிப் பெண் : வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்!!

1369


ஹோமாகமவில்..ஹோமாகம பிரதேசத்தில் வாடகை வீடு ஒன்றில் பட்டதாரி பெண் ஒருவர் அவருடைய பட்டதாரி காதலனால் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விவசாய அமைச்சில் கடமையாற்றிய அசினி துஷார விஜேதுங்க என்ற 31 வயதுடைய பட்டதாரி யுவதியே காதலனால் கொலை செய்யப்பட்டுள்ளார்.காதலியை கொன்ற பின்னர் வலிநிவாரணி மாத்திரையை குடித்து காதலன் தற்கொலைக்கு முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான காதலன் நேற்று (07) பிற்பகல் களுத்துறை, நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது சட்டையில் ரத்தக்கறை இருந்ததால் சந்தேகமடைந்த பொலிஸார் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். விசாரணையில் காதலியை கொலை செய்ததாக சந்தேக நபர் கூறியுள்ளார். அதன்படி, ஹோமாகம நீதிமன்ற வீதியில் உள்ள வாடகை வீட்டில் 31 வயதுடைய பெண் கழுத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


கொலையுண்ட யுவதி நேற்று மாலை 6 மணி அளவில் சந்தேக நபருடனும் அவரது தாயாருடனும் வாடகை அறைக்கு வந்துள்ளளார்.அதன் பின்னர் , இரவு 7 மணி அளவில் தாய் மாத்திரம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தாயார் சென்ற பின்னரே கொலை இடம்பெற்றதாக கூறப்படுக் நிலையில், தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதமே கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அதேவேளை கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 32 வயதுடைய சந்தேக நபர் விவசாய அமைச்சில் பணிபுரியும் பட்டதாரி எனவும் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.