ஹோமாகமவில்..
ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று காலை 22 வயதுடைய யுவதியின் கழுத்தை வெட்டி படுகொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் பிரதேசத்தை விட்டு ஓடி சென்று களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் தான் சுகயீனமடைந்திருப்பதாக கூறி அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் தெஹிவளை எண்டர்ன் வீதி பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய அச்சினி துஷாரி என்ற யுவதியே இன்று காலை ஹோமாகம நீதிமன்ற வீதியில் கழுத்தை வெட்டி கொலை செய்ய்பட்டுள்ளதாக களுத்துறை உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை நடந்த விசாரணையில் காதல் உறவின் அடிப்படையில் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபர் இன்று காலை களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது சட்டைப் பையில் இரத்தக் கறை காணப்பட்டுள்ளது.
தலைமையக பொலிஸ் பரிசோதகர் ருவன் விஜேசிங்கவின் பணிப்புரைக்கமைய மேலதிக விசாரணைகளின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் பொலிஸ் பாதுகாப்பில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளனர்.