புகைப்பட மோகத்தால் இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

524


ஐப்பானில்..புகைப்பட மோகத்தால் பெண் பாலத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று ஐப்பான் நாட்டில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பாலத்தில் இருந்தவாறு கையடக்க தொலைபேசியில் மும்முரமாகப் படங்கள் எடுத்துக்கொண்டிருந்தபோது 40 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
ஷிசுவோகா மாநிலத்தின் ஹிகாஷிசு நகரில் இருக்கும் பாலத்திலிருந்து அந்தப் பெண் விழுந்ததாக அவரின் தந்தை பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார். இச்சம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக ஜப்பானிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


அவரைக் கண்டுபிடித்து மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோது அவரின் மரணம் உறுதிசெய்யப்பட்டது. அந்தப் பெண் சீபா (Chiba) மாநிலத்தைச் சேர்ந்தவர். தமது தந்தையைக் காண அவர் ஹிகாஷிசு நகருக்குச் சென்றிருந்தார்.

தந்தையும் மகளும் தந்தையின் நண்பருடன் உணவு சாப்பிடக் காரில் சென்றுகொண்டிருந்ததாக Yomiuri Shimbun செய்தி நிறுவனம் தெரிவித்தது. அவர் மான் ஒன்றைக் காணக் காரிலிருந்து இறங்கியதாக நம்பப்படுகிறது.