அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் விடுமுறை : கல்வி அமைச்சு அறிவிப்பு!!

1227

விடுமுறை..

எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

13ஆம் திகதி வழங்கப்படும் விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் நடைபெறும் என கல்வி அமைச்சின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் மத்திய மாகாணம், சபரகமுவ மாகாணம் மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.