இஸ்ரேல் – ஹமாஸ் போரில் உயிரிழந்த இலங்கையருக்கு இழப்பீடு!!

451


சுஜித் பண்டார..இஸ்ரேல் – ஹமாஸ் போரில் உயிரிழந்த இலங்கை பிரஜையான சுஜித் பண்டாரவின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு இஸ்ரேல் அரசாங்கம் வழங்கி வரும் அனைத்து இழப்பீடுகள் மற்றும் கொடுப்பனவுகளை சுஜித் அவர்களுக்கும் பெற்றுக் கொடுப்பதற்கு பணியகம் ஏற்கனவே தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சுஜித் பண்டார யடவர 2018 ஆம் ஆண்டு உதவியாளர் பணிக்காக இஸ்ரேலுக்கு சென்ற நிலையில் அங்கு உயிரிழந்தார்.


சுஜித் இறக்கும் போது அவருக்கு வயது 48 ஆகும். இந்நிலையில், ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த சுஜித் பண்டார யடவரவின் உடல் நேற்று காலை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டம்ை குறிப்பிடத்தக்கது.