வவுனியாவைச் சேர்ந்த இளைஞரொருவர் கிளிநொச்சியில் அதிரடியாக கைது!!

2199

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி – ஆனையிரவு பகுதியல் இன்றையதினம் (09-11-2023) மாலை இளைஞன் ஒருவர் கஞ்சா போதைபொருளுடன் இளைஞன் ஒருவர் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உடுத்துறை பகுதியிலிருந்து கஞ்சா போதைபொருளுடன் இளைஞன் ஒருவர் செல்வதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதையடுத்து, ஆனையிரவு பகுதியில் வைத்து சோதனையிட்ட போது

மோட்டார் சைக்கிளுடன் 390 கிராம் கஞ்சா போதைபொருளுடன் வவுனியாவை சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.