டிக்டாக் பிரபலம் மாரடைப்பால் மரணம் : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

357


பிரேசிலில்..டிக்-டாக் பிரபலம் அகால மரணமடைந்த சம்பவம் அவருடைய ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த டிக்-டாக் பிரபலம் லுவானா ஆன்ட்ரே (29) உடல் அழகிற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.அப்போது எதிர்பாரதவிதமாக உயிரிழந்தார். Fitness freakஆன லுவானாவுக்கு கால் மூட்டில் அதிகப்படியான கொழுப்பு இருந்துள்ளது.அதனை அகற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தபோதே 4 முறை மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.
சிகிச்சையை பாதியிலேயே நிறுத்தியும் லுவானாவை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த செய்து அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அழகுக்கு அறுவை சிகிச்சை செய்ய சென்று உயிர் பறிபோன சம்பவம் பகீர் கிளப்பியுள்ளது.