வவுனியாவில் களைகட்டிய தீபாவளிப் பண்டிகை வியாபாரம்!!

1215

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் தீபாவளி பண்டிகை வியாபாரமானது களைகட்டியுள்ளதை காணக்கூடியதாக இருந்தது.

குறிப்பாக சிறுவர் முதல் பெரியவர் வரை தமக்கான புத்தாடைகள், வெடிபொருட்கள் மற்றும் இனிப்பு பண்டங்களை வாங்கிச்செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது. இதன் காரணமாக அதிகளவான மக்கள் நகரில் குவிகின்றமையால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.



இதேவேளை வவுனியாவினை சூழ அதிகளவான அங்காடி வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டும் வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.