கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலம் : அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!

1429


கம்பளையில்..கம்பளை தெல்பிடிய தேவிட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு சடலம் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சடலம் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தில் பத்மா தர்மசேன என்ற 63 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையுண்ட பெண் பண கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நகருக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அடையாளம் தெரியாத நபரொருவர் அவரை கொலை செய்து அவரிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றிருக்கக்கூடும் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.