வவுனியா பல்கலைக்கழகத்தில் கொமர்ஷியல் வங்கியின் “மரங்கள் நிறைந்த தேசம்” எனும் தொனிப்பொருளில் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

919


கொமர்ஷியல் வங்கியின் “மரங்கள் நிறைந்த தேசம்”….கொமர்ஷியல் வங்கியின் “மரங்கள் நிறைந்த தேசம்” எனும் தொனிப்பொருளின் கீழான இலங்கை முழுவதும் 100,000 மரங்களை நடும் தேசிய திட்டத்தின் முதற்கட்டமாக நேற்றைய தினம் கொமர்ஷியல் வங்கி வவுனியா கிளையினால் வவுனியா பல்கலைக்கழகத்தில் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது.இதன்போது வவுனியா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் T.மங்களேஸ்வரன், கொமர்ஷியல் வங்கியின் வட பிராந்திய முகாமையாளர் திரு R.சிவஞானம், வவுனியா பல்கலைக்கழக பதிவாளர் திரு N.ராஜவிசாகன், மற்றும் வவுனியா நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் எந்திரி K.கஜமுகதாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.இவ்விழாவானது வங்கி முகாமையாளர் திரு T.யோகச்சந்திரா அவர்களின் தலைமையில் வங்கி ஊழியர்களினால் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.


கொமர்சியல் வங்கியின் வவுனியா கிளையின் இதுபோன்ற நிலைபெறுதகு எதிர்காலத்தை நோக்கிய சூழல் சார்ந்த செயற்பாடுகள் வவுனியா மக்களால் பெரிதும் வரவேற்கப்படுகிறது.