
தனது தந்தையை தொடர்ச்சியாக அடித்து கொடுமைப்படுத்திய முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் நவகத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (23.06) மாலை இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது மகன் ஒவ்வொரு நாளும் தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாக குருகெட்டியாவ – சாமுத்திகம பிரசேத்தில் வசிக்கும் வயோதிபர் நவகத்தேகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்படி விசாரணைகளை மேற்கொண்ட நவகத்தேகம பொலிஸார் சந்தேகநபரான மகனை கைது செய்தனர். வெலிஓயா பிரதேச இராணுவ முகாமில் கடமையாற்றியவேளை அங்கிருந்து தப்பிச் சென்ற இராணுவ சிப்பாய் ஒருவரே இந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றதன் பின் சந்தேகநபர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் அவதானம் செலுத்தியுள்ளனர். சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். நவகத்தேகம பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.






