ஹட்டனில்..
ஹட்டனில் டிக்ஓயா ஆற்றில் விழுந்து காணாமல் போயிருந்த இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சடலம் குறித்த ஆற்றில் இருந்து நேற்று (12.11.2023) மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் – டிக்கோயா, ஒஸ்போன் தோட்டத்தின் மேல் பிரிவைச் சேர்ந்த சந்திரசேகரன் சுரேன் என்ற 28 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஹட்டன் நகருக்கு நேற்று முன்தினம் (11) வந்துள்ள குறித்த நபர், மது அருந்திவிட்டு, பேருந்தில் சென்றுள்ளார். பேருந்தில் இருந்து இறங்கி, வீடு நோக்கி நடந்து செல்கையிலேயே ஆற்றில் விழுந்து காணாமல் போய் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து தோட்ட மக்கள், பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவரின் மனைவி தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.