இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!!

936


இலங்கையில்..இலங்கையில் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை நிலவரத்தின்படி இன்று(14) ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 160,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கடந்த சில தினங்களுடன் ஒப்பிடும் போது இது சிறு அதிகரிப்பாகும். இதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 173,500 ரூபாவாக அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நேற்றையதினம்(13.11) ஒரு பவுண் 22 கரட் தங்கம் 159,500 ரூபாவாகும், 24 கரட் ஒரு பவுண் தங்கம் 172,500 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.