வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா!!(படங்கள்)

767

வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா நேற்று (23.06) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து வந்த பக்த அடியார்கள் புதூர் நாகதம்பிரானை தரிசித்தனர். பல இடங்களிலும் இருந்து வந்த பக்தர்களுக்கான பஸ் ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.

இதேவேளை நேர்த்திக்கடன் செய்வோர் பொங்கல் பொங்கியதுடன் காவடிக் பறவைக்காவடிகள், தீச்சட்டி, பாற்குடம் என்பனவற்றையும் தாங்கி ஆலயத்தை நோக்கி வருகை தந்தனர்.

இன் நிகழ்வுகளில் வவுனியா அரசாங்க அதிபர் திரு.பந்துல ஹரிச்சந்திர, நெடுங்கேணி பிரதேச செயலாளர் திரு.கே.பரந்தாபன், வடமாகாண சபை உறுப்பினர் திரு.தியாகராசா உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

இரவு 12 மணிக்கு பண்டமெடுக்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன் நாகதம்பிரானுக்கு விசேட பொங்கல் நிகழ்வும் இடம்பெற்றது. தொடர்ந்து இசை நிகழ்சிகள் உட்பட பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

அத்துடன் நாகதம்பிரானுக்கு பாடல் அல்பம் ஒன்றும் வெளியிடப்பட்டது. நேற்றைய நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டதை காணக்கூடியதாக இருந்தது.

-படங்கள் திருவருள்-

1 2 3 4 5 6 7 8

620-100 Final