யாழிலிருந்து கொழும்புக்கு சொகுசுப் பேருந்தில் பயணித்த குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி!!

2174

சொகுசுப் பேருந்தில்..

யாழிலிருந்து கொழும்புக்கு சென்ற குடும்பஸ்தரின் பணம், சொகுசுப் பேருந்தில் வைத்து 4 பெண்கள் 2 ஆண்கள் கொண்ட கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.கடந்த 02 ஆம் திகதி இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் பலாலியிலிருந்து, இரவு கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த NGC சொகுசு பேரூந்தில் ஒரு குடும்பம் முற்பதிவு செய்து பயணத்தை மேற்கொண்டிருந்தது.பேரூந்து புத்தளம் பகுதியை அடைந்த பொழுது 4 பெண்கள் மற்றும் 2 ஆண்களுமாக 6 பேர் பேரூந்தில் ஏறியிருந்தனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியிலிருந்து ஏறிக்கொண்ட ஒரு குடும்பத்தின் 1 லட்சம் ரூபாய் ரொக்க பணம், கொழும்பு ஆமர்சீட் பகுதியில் பேரூந்தில் வைத்து களவாடப்பட்டிருந்தது.இந்நிலையில் பணத்தினை களவாடியவர்கள் ஐந்துலாம்பு சந்தியில் இறங்கிக் கொண்டதாக பேரூந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தெரிவித்திருந்தனர்.

பணத்தினை இழந்த குடும்பத்தினர் கொழும்பு ஆமர்சீட் பகுதியில் இறங்க முற்படும்போதே திருட்டு கும்பலை சேர்ந்த பெண் ஒருவர் பேரூந்தில் பொருத்தப்பட்டிருந்த காமராவினை தனது கைப்பையினால் மறைக்க மற்றைய பெண் பணத்தினை திருடும் காட்சிகள் இரகசிய கண்காணிப்பு கமராவினுள் பதிவாகியுள்ளது.

இதேவேளை பேரூந்து நடத்துனர் பணம் தொடர்பில் முன்பே எச்சரிக்கை ஒன்றையும் விடுத்திருந்ததாக பணத்தினை இழந்த குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.பணத்தை திருடிய கும்பலும் முற்பதிவு செய்தே குறித்த பேரூந்தில் பயணித்திருந்ததாக தெரிவித்த பேரூந்து நடத்துனர், முற்பதிவு செய்த தொலைபேசி இலக்கத்தையும் பணத்தை இழந்தவர்களிடம் வழங்கியுள்ளனர்.

திருட்டு சம்பவம் தொடர்பில் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த கமரா மூலம் பெறப்பட்ட காணொளிகள் மற்றும் கிடைக்கப்பெற்ற தொலைபேசி எண் என்பனவற்றை வைத்து கொழும்பு கொட்டகேனா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பயணைகள் தாங்கள் கொண்டு செல்லும் பெறுமதியான பொருட்களை அவதானத்துடன் எடுத்து செலவது சிறந்தது. அத்துடன் பயணத்தின் போது அநாவசியமாக பெரும் தொகை பணத்தினை எடுத்து செல்லாது வங்கியில் வைப்பிட்டு செல்லும் இடத்தில் வங்கியில் அதனை எடுக்கலாம்.