முக்கோண காதல் விவகாரம் : அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன்!!

528

திருப்பத்தூரில்..

திருப்பத்தூரில் காதல் விவகாரத்தில் 19 வயது இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் அருகே லட்சுமி நகரில் வசித்து வரும் சங்கர் என்பவரின் மகன் சுகேஷ் என்கிற சாமுவேல்(19). அப்பகுதியைச் சார்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கார்த்திக் என்னும் நபரும் சுகேஷ், காதலிக்கும் பெண்ணை காதலித்ததாகத் தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே மோதல் உருவானது. இதில் நடந்த கைகலப்பில் சுகேஷ் தாக்கியதில் கார்த்திக் பலத்த காயம் அடைந்துள்ளார்.

இந்த முக்கோண காதல் விவகாரம், கார்த்திக்கின் தந்தை செல்வத்துக்குத் தெரியவர, தந்தை செல்வம் – மகன் கார்த்திக் இருவர் உட்பட ஐந்து பேர் சேர்ந்து சென்று, சுகேஷை இரும்புக் கம்பியால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

இதில் திருப்பத்தூரிலும், அதைத் தொடர்ந்து பெங்களூருவிலும் சிகிச்சைப் பெற்று வந்த சுகேஷ், இன்று அதிகாலை சிகிச்சைப்பலனின்றி காலமானார். இதனால் அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், தந்தை செல்வம், மகன் கார்த்திக் மற்றும் அவரது கடையில் பணி செய்யும் பாலாஜி, முத்து ஆகியோர் உட்பட ஐந்துபேரை காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.