வீட்டின் அருகே விளையாடும் போது விபரீதம்.. 3 வயதுக் குழந்தை துடிதுடித்து பலியான சோகம்!!

670


தர்மபுரியில்..பாலக்கோடு அருகே சரக்கு வாகனம் ஏறி மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்காடு அருகே ஜர்க்கசமுத்திரம் பகுதியில் தனது வீட்டின் அருகே குழந்தை விளையாடி கொண்டிருந்தது.அப்பொழுது அந்த வழியாக வந்து சரக்கு வாகனம் வந்துள்ளது. இதனையடுத்து வாகனத்தின் குறுக்கே குழந்தை சென்றுள்ளது. அப்பொழுது குழந்தையின் மீது சரக்கு வாகனம் ஏறி இறங்கியது.
இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது. இதனையடுத்து சரக்கு வாகனத்தின் ஓட்டுனர் தப்பியோடினார். இதுக்குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடட்தி வருகின்றனர்.