பிறந்தநாள் அன்று பாடசாலை சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம் : தாய் வெளிநாட்டில்!!

510


வெல்லம்பிட்டியில்..வெல்லம்பிட்டி – வெரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த ஆறு வயது மாணவியின் தாயார் வெளிநாட்டில் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.வெல்லம்பிட்டி – வெரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் நேற்றையதினம், குடிநீர் குழாய் பொறுத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் ஆறு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததுடன் ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் உயிரிழந்ததாகக் கூறப்படும், ஆறு வயதுடைய செஹன்சா என்ற சிறுமியின் தாயார் வெளிநாட்டில் பணி புரிந்து வரும் நிலையில், பாட்டி மற்றும் சித்தியின் அரவணைப்பில் சிறுமி இருந்துள்ளார்.


அவரது தாயார் தினமும் தொலைபேசியின் ஊடாக அழைப்பெடுத்து சிறுமியுடன் கதைத்து வந்ததாக உயிரிழந்த சிறுமியின் சித்தி தெரிவித்துள்ளார்.உயிரிழந்த சிறுமியின் பிறந்ததினமும் நேற்றுதான் என தெரிவிக்கப்படுகின்றது.