வெல்லம்பிட்டியவில்..
வெல்லம்பிட்டிய, வேரகொட வித்தியாலையத்தில் உள்ள சுவரொன்று நேற்று காலை இடிந்து வீழ்ந்ததில் 6 வயது மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.
நீர்க்குழாய் பொருத்தப்பட்டுள்ள சுவர் இவ்வாறாக இடிந்து வீழ்ந்ததில் மேலும் 5 மாணவர்கள் பலத்த காயமடைந்து, வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டிய, வேரகொட வித்தியாலையத்தில் உள்ள சுவரொன்று இடிந்து வீழ்ந்ததில் தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த 6 சிறுவர்கள் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஷெஹான்சா நெத்சரணி எனும் 6 வயது மாணவி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.அத்துடன், குறித்த மாணவியின் ஆறாவது பிறந்தநாள் நேற்று எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உயிரிழந்த மாணவியின் மரணத்தை தொடர்ந்து குறித்த பகுதியில் உள்ள பெற்றோர் மற்றும் மக்கள், பாடசாலையிலுள்ள ஆசிரியர் மற்றும் அதிபரை தாக்க முற்பட்டுள்ளனர்.
இலங்கையில் தொடர்ந்து வரும் சீரற்ற வானிலை காரணமாக 5 வருட பழைமையான இந்த சுவார் இடிந்து வீழ்ந்திருக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, வேரகொட வித்தியாலையத்தில் இன்று இடம்பெற்ற விபத்துக்கு, பாடாசாலையின் கவனயீனமே காரணமென பிரதேசவாசிகள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.