கனடாவுக்கு பயணம் : விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழர்!!

1749

விமான நிலையத்தில்..

போலி கனேடிய விசாவைப் பயன்படுத்தி கனடாவுக்கு செல்ல முயன்ற மட்டக்களப்பு ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் வைத்து இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைதான மட்டக்களப்பு நபர் டுபாய் செல்லும் EK-653 – எமிரேட்ஸ் விமானதில் செல்லவிருந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் அனுமதிக்காக அவர் சமர்ப்பித்த ஆவணங்களில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்ட போதே , அவரிடம் இருந்தது போலி விசா என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை அண்மைகாலமாக இலங்கை தமிழர்கள் பலரும் கனடா வழங்கியுள்ள சலுகையை பயன்படுத்தி அங்குப் செல்வது அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலையில் போலி விசாவில் கனடா செல்ல முயன்ற மட்டக்களப்பு நபர் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.