2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இல் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 2,888 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன், மொத்தமாக 337,956 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.