வெளியான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு : முதல் இடத்தில் ஐவர்!!

1314

புலமைப்பரிசில்..

2023ஆம் ஆண்டிற்கான புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகியிருந்தன.இதன் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் ஐந்து மாணவர்கள் அதிகூடிய பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இவர்கள் 198 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இவ்வருடம் 15.22 சதவீதமான மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு அதிகமாக மதிப்பெண்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம், இது 14.64 சதவீதமாக பதிவாகியிருந்தது.

மேலும், இந்த ஆண்டு பரீட்சைக்கு 332,949 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர், இவர்களுள் 50,664 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு அதிகமாக மதிப்பெண்களைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.