முல்லைத்தீவில் 13 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு : தாய், தாயின் 2ம் கணவன், மருந்தக உரிமையாளர் கைது!!

1866

முல்லைத்தீவில்..


முல்லைத்தீவு – குமுழமுனை பகுதியில் 13 வயதான சிறுமியை சட்டவிரோத கருக்கலைப்புக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறுமியின் தாய் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,கடந்த வருட இறுதியில் தாயின் 2வது கணவனால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி கர்ப்பம் தரித்ததாக் கூறப்படுகின்றது. இந் நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு அருகில் உள்ள மருந்தகத்தில் வைத்து சிறுமிக்கு சட்டவிரோத கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தற்போது சிறுமியின் உறவினர்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுமியின் தாய், அவருடைய 2வது கணவன் மற்றும் மருந்தக உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.