வவுனியா மாவட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் முதல் இடத்தில் இரு மாணவர்கள்!!

7604

புலமைப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டன. இதன்படி வவுனியா மாவட்டத்தில் 184 புள்ளிகளைப் பெற்று இரு மாணவர்கள் முதல் நிலை பெற்றுள்ளனர்.

2023 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. குறித்த பெறுபேற்றில் வவுனியா மாவட்டத்தில் இரு மாணவர்கள் 184 புள்ளிகள் பெற்று முதல் நிலை பெற்றுள்ளனர்.

அந்தவகையில், வவுனியா தெற்கு வலயத்தின் பின் தங்கிய பாடசாலையான ஆசிகுளம் அ.த.க பாடசாலை மாணவன் ரவீந்திரதாசன் சரோன் மற்றும் அதே வலயத்தைச் சேர்ந்த தேசிய பாடசாலையான வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் நவரட்ணம் சகானன் ஆகியோர் 184 புள்ளிகளைப் பெற்று முதல் நிலை பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்ந்துள்ளனர்.