வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி பியரினா மாவட்ட ரீதியில் மூன்றாமிடம் : 74 மாணவர்கள் சித்தி

2633

புலமைப் பரிசில் பரீட்சையில் மாவட்டத்தில் 3 ஆம் நிலை உட்பட வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 74 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் மூன்றாம் நிலை உட்பட இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 74 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 176 மாணவர்கள் குறித்த பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

அவர்களில், மாவட்ட மட்டத்தில் மூன்றாம் நிலை உட்பட மாவட்ட வெட்டுப்புள்ளியான 145 இற்கு மேல் 74 மாணவர்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அதில், யூஜின் ஆனந்தராஜ் எறின் பியரினா என்ற மாணவி 181 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் மூன்றாம் நிலையைப் பெற்றுள்ளார்.

குறித்த பாடசாலையில் 70 க்குக் குறைவான புள்ளிகளை 04 மாணவர்களே பெற்றிருக்கின்றனர். வவுனியா மாவட்டத்தில் அதிகளவான மாணவர்களைச் சித்தியடைந்த பாடசாலையாக இது விளங்குகின்றது.