நீச்சல் தடாகத்தில் விழுந்த 6 வயதுச் சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!!

604


களுத்துறையில்..களுத்துறை பதுரலிய பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் விழுந்து சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,வெலிவேரிய, அம்பரல்வ வடக்கு பகுதியைச் சேர்ந்த 6வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி தனது பெற்றோருடன் நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
நீச்சல் தடாகத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் பதுரலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.