காதலியை மலை உச்சிக்கு கூட்டி சென்று காதலன்செய்த கொடூரம் : நெஞ்சை உலுக்கும் சோகம்!!

898

கர்நாடகாவில்..

கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியில் அமைந்துள்ளது கவலாகெரே என்ற கிராமம். இங்கு சுசித்ரா (20) என்ற இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். இவர் மொசலேஹொசஹள்ளி என்ற பகுதியில் இருக்கும் தனியார் இன்ஜினியர் கல்லூரி ஒன்றில் படித்து வரும் நிலையில், அதே கல்லூரியில் படித்த அவரது சீனியர் மாணவரான தேஜஸ் (23) என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் காதலித்து வந்த நிலையில், தேஜஸ் தனது படிப்பை முடித்து விட்டு தற்போது தனியார் நிறுவனம் ஓரணில் பணியாற்றி வருகிறார். இந்த சூழலில் இருவருக்கும் இடையே சரியாக பேச்சுவார்த்தை இல்லாமல் போயுள்ளது.

அதோடு பேசினாலே சண்டை என்று இருந்துள்ளது. இதனால் தேஜஸுடன் பேசுவதை சுசித்ரா தவிர்த்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் மேலும் சண்டை ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சுசித்ரா, தேஜஸுடன் இருந்த தனது காதலை பிரேக் அப் செய்ய எண்ணி, அவரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தேஜஸ், சுசித்ராவிடம் சண்டையிட்டுள்ளார். தொடர்ந்து பேசுவதை முற்றிலுமாக தவிர்த்து வந்துள்ளார். இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்த தேஜஸ், அவரை கொலை செய்ய எண்ணியுள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று தேஜஸ், சுசித்ராவை கடைசியாக சந்திக்க தனியாக அழைத்துள்ளார். அவர் கூறியதை நம்பி இறுதியாக பேச அவர் அழைத்த இடமான குந்திகுட்டா மலைப் பகுதிக்கு சென்றுள்ளார் சுசித்ரா. அப்போது அவர் சமாதானம் பேசினார். ஆனால் சுசித்ரா சமரசம் ஆகவில்லை. மேலும் அவரை பிடிக்கவில்லை என்றும் கூறி திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தேஜஸ், தான் கொண்டு வந்த கத்தியை வைத்து சுசித்ராவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்த அவரை, அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளார் தேஜஸ். சில மணி நேரம் கழித்து அந்த பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் இறந்து கிடந்த சுசித்ராவின் சடலத்தை கண்டு அதிர்ந்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த கொடூர செயலில் ஈடுபட்டது அவரது காதலன் தேஜஸ் என கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து தப்பியோடிய தேஜஸை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து தேஜஸிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேக் அப் செய்ததால் காதலியை மலை உச்சிக்கு கூட்டி சென்று தள்ளி விட்டு கொலை செய்த காதலின் வெறிச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.