இந்திய அணியின் தோல்வியால் பரிதாபமாக பறிபோன இளைஞனின் உயிர்!!

747

இந்தியாவில்..

இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வியை தாங்கமுடியாமல் மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை இவ்வருடம் இந்தியா நடத்தி வந்தது.

இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்றுள்ளனர். இதில் அரையிறுதிப்போட்டியில் விளையாடிய 4 அணிகளில் இருந்து 2 அணிகள் வெற்றிப்பெற்று இறுதிபோட்டிக்கு தேர்வாகியிருந்தனர்.

அதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நேற்றைய தினம் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி கிண்ணத்தை வென்றது. இந்த சம்பவமானது ஒட்டுமொத்த இந்திய அணி ரசிகர்களையும் நிலைகுழைய செய்தது.

இதனால் உயிர் பறிபோன சம்பவம் தான் இந்தியாவின் திருப்பதி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. திருப்பதி அருகே துர்க்க சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஜோதி குமார் என்பவருக்கே இது நிகழ்ந்துள்ளது. இவர் நேற்றைய தினம் தனது வீட்டில் இருந்து இறுதி போட்டியை பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.

ஆரம்பத்தில் இந்தியா துடுப்பாட்டதுடன் ஆரம்பித்தது. கப்பு நமக்குதான் என பல ரசிகர்கள் உறுதியாக நம்பியதை போல ஜோதிகுமாரும் ஆர்வத்துடன் போட்டியை ரசித்துக் கொண்டிருந்தார். போட்டியாது மாற மாற வேதனையில் இருந்த இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என குடும்பத்தார்கள் தெரிவித்துள்ளனர்.

பதறியடித்த குடும்பத்தினர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.