சொகுசுக் கார்களை தோற்கடித்த இந்திய எருமை மாடு.. விலை மதிப்பு பல லட்சங்களில்!!

344

ஹரியானாவில்..

இந்திய மாநிலம், ஹரியானாவைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் எருமைமாட்டின் விலை சொகுசு காரை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம், பிவானியில் உள்ள ஜூய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சஞ்சய். இவருக்கு 3 வயதான எருமை மாடு ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார். இவர், தன்னுடைய எருமை மாட்டை மிகுந்த கவனமாக வளர்த்து வருகிறார்.

மேலும், இவர் இந்த எருமை மாட்டிற்கு தர்மா என பெயர் வைத்துள்ளார். தற்போது, ஒரு நாளைக்கு 15 லிட்டர் பால் கொடுக்கிறது. ஹரியானாவில் உள்ள மக்கள் சொகுசு கார்களை வைத்திருப்பதை மிக பெருமையாக எண்ணுவார்கள். ஆனால், சஞ்சயின் எருமைமாட்டின் விலையானது சொகுசு கார்களை தோற்கடித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு இந்த எருமை மாட்டின் விலை ரூ.46 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டதாகவும், ஆனால், இதனை குறைந்தபட்சம் ரூ.61 லட்சத்திற்கு விற்பதாகவும் சஞ்சய் கூறியுள்ளார்.

மேலும், தர்மாவிற்கு ஒவ்வொரு நாளும் பசுந்தீவனம், தானியங்கள் மற்றும் 40 கிலோ கேரட் உணவாக அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பஞ்சாப், உத்தர பிரதேசம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் பல அழகு பட்டங்களையும் தர்மா பெற்றுள்ளது. இவரை தவிர, டாக்டர் ஒருவர் அழகைப் பொறுத்தவரை எருமைகளின் ராணி தர்மா என்று கூறியுள்ளார்.