வௌ்ளவத்தையில் 13 லட்சம் கொள்ளையிட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!!

643

A1

கொழும்பு, வௌ்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் வங்கியில் வைப்பிலிட கொண்டு சென்ற 13 லட்சத்து 65,000 ரூபா பணத்தை கொள்ளையிட்ட வௌ்ளவத்தை பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 21ஆம் திகதி குறித்த நபர் வங்கியில் வைப்பிலிட சென்று கொண்டிருந்தபோது, அந்நபரை மறித்த பொலிஸார் இருவர் தாம் இரகசிய பொலிஸார் எனக் கூறி அந்நபரை முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்றுள்ளனர்.

இதன் பின்னர் அந்நபரிடமிருந்த பணத்தை பொலிஸார் கொள்ளையிட்டதாக நேற்று மாலை வௌ்ளவத்தை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதன்படி விசாரணை மேற்கொண்ட பொலிஸார் வௌ்ளவத்தை பொலிஸில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரை கைது செய்துள்ளனர். மற்றைய பொலிஸ் கான்ஸ்டபிள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
620-100 Final