வவுனியா மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு!!

2469

வெளியான 2023 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா மக்கள் வங்கி கிளை முகாமையாளர் ம.கலிஸ்ரஸ் தலமையில் இன்று (21.11.2023)காலை இடம்பெற்றிருந்தது.

அந்த வகையில் மாவட்டத்தில் முதல்நிலையினை பெற்ற மாணவர்களான வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் செல்வன் நவரத்னம் சகாணன் (184),



வவுனியா ஆசிகுளம் அ.த.க பாடசாலை மாணவன் செல்வன் ரவீந்திரதாசன் ஷாரோன் (184) ஆகிய இரு மாணவர்களுக்கும் வவுனியா மக்கள் வங்கி கிளையினர் பதக்கம் அணிவித்து பரிசில் பொதிகளும் வழங்கி வைத்தனர்.

இந் நிகழ்வில் வவுனியா மக்கள் வங்கி கிளை வியாபார மேம்பாட்டு உத்தியோகத்தர் ச.ஐணாங்கணன் மற்றும் கிளை உத்தியோகத்தர் தி.தக்க்ஷன், பாடசாலை பிரதி அதிபர்கள், வகுப்பாசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.