யாழ். மண்ணிலிருந்து சாதனை : நீதித்துறை வரலாற்றில் மிக இளவயது தமிழ் பெண் நீதிபதி!!

2045

இலங்கையில்..

இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிக இளவயதில் நீதிபதியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் தேர்வாகியுள்ளார். வரலாற்றில் மிக இளவயது தமிழ் பெண் நீதிபதியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாதுரி நிரோசன் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். இவர் எதிர்வரும் முதலாம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

யா/சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியின் பழைய மாணவியான இவர் தனது 31வது வயதில் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். மாதுரி நிரோசன் நாடளாவிய நீதியில் இடம்பெற்ற நீதிபதிகளுக்கான போட்டியில், அகில இலங்கை ரீதியில் 12ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவான இளம் தமிழ் நீதிபதி என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார். இலங்கையில் தமிழ் நீதிபதிகள் உருவாகுவது எட்டாக் கனியாகவே உள்ள நிலையில், மாதுரி நிரோசனுக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.