கனடாவில் ஒரே லொத்தர் சீட்டிலுப்பில் கணவன் – மனைவிக்கு அடித்த அதிர்ஷ்டம்.!!

1100

கனடாவில்..

ஒரே சீட்டிலுப்பில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் வெற்றியீட்டியுள்ளனர். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இவ்வாறு ஒரே லொத்தர் சீட்டிலுப்பில் கணவன் மற்றும் மனைவி வெற்றியினை பதிவு செய்துள்ளனர்.



இந்த தம்பதியினர் தற்செயலாக இரண்டு லொட்டோ லொத்தர் சீட்டுக்களை கொள்வனவு செய்துள்ளனர். இந்த இரண்டு லொத்தர் சீட்டு இலக்கங்களும் ஒரே எண்களைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

செனோன் மற்றும் அவரது கணவர் கார்ஸ்டன் ஆகிய இருவரும் சம அளவிலான பரிசுத் தொகையை வென்றெடுத்துள்ளனர். இந்த இருவரும் இணைந்து சுமார் 33 லட்சம் டொலர் ஜாக்பொட் பரிசு வென்றெடுத்துள்ளனர்.

குறித்த தம்பதியினர் தற்செயலாக இவ்வாறு இரண்டு ஒரே இலக்கங்களை உடைய லொத்தர் சீட்டுக்களை கொள்வனவு செய்து பாரியளவு தொகை பரிசினை வென்றெடுத்துள்ளனர்.