போகோ ஹராம் தீவிரவாதிகள் அட்டகாசம் தொடர்கின்றது : மீண்டும் பல பெண்கள் கடத்தல்!!

776

Terror

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளால் மேலும் பல பெண்களையும் சிறார்களையும் கடத்திச் சென்றுள்ளனர். இதனை நைஜீரிய அரசாங்க தரப்பு உறுதி செய்துள்ளது.

கடந்த வாரங்களில் தாக்குதல் நடத்தப்பட்ட பொர்னோ பிரதேசத்தில் இருந்து சுமார் 60 பெண்களும் சிறார்களும் கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது போராளிகளை விடுதலை செய்தால், கடத்திச் செல்லப்பட்டோரை தாம் விடுவிக்க முடியும் என போகோ ஹராம் தீவிரவாதிகள் அறிவித்துள்ளார்கள்.

ஏற்கனவே கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி போகோ ஹராம் தீவிரவாதிகளால் சுமார் 200 பள்ளி மாணவிகள் கடத்திச் செல்லப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
620-100 Final