கிரிக்கெட் போட்டியொன்றில் தமிழ் மாணவனின் வியக்க வைக்கும் சாதனை!!

630


கொழும்பில்..கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் ஜெயவர்த்தன மகா வித்தியாலயத்துக்கு இடையிலான 13 வயதினருக்குட்பட்ட கிரிக்கெட் போட்டியொன்றில் செல்வசேகரன் ரிஷியுதன் என்ற இந்துக் கல்லூரி மாணவன் சாதனையொன்றை படைத்துள்ளார்.ஜெயவர்த்தன மகா வித்தியாலய கிரிக்கெட் அணிக்கு எதிராக பந்து வீசிய ரிஷியுதன், 9.4 ஓவர்கள் வீசி ஒரு ஓட்டத்தினையேனும் வழங்காமல் 8 விக்கெட்டுக்களை வீழ்த்தி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்துக் கல்லூரி அணி 126 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
அதன்பின்னர் பந்துவீச்சில் இந்துக் கல்லூரியின் கையே போட்டி முழுவதும் ஓங்கிநின்றது.ரிஷியுதனின் சாதனை பந்துவீச்சினால் ஜெயவர்த்தன மகா வித்தியாலய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 28 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதன் மூலம் செல்வசேகரன் ரிஷியுதன், பாடசாலைக்கு பெருமை சேர்த்தது மட்டுமில்லாமல் முதல் இன்னிங்ஸில் வெற்றியையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.