வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் சடலம் மீட்பு!!

1051

பலஹருவவில்..

பலஹருவ, குடோ ஓயா பாயும் அளுத்வெல பாலத்தின் மீது மோட்டார் சைக்கிளை செலுத்திய போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சற்று தொலைவில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் ஹப்புத்தளை பிரதேசத்தில் வசிக்கும் உமாஓயா திட்டத்தில் பணிபுரியும் பணித்தள மேற்பார்வையாளராவார். மேலும் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.