33 வயதில் ஜிம் பயிற்சியாளர் மாரடைப்பால் மரணம்!!

288

பிரேசில்..

பிரேசில் நாட்டை சேர்ந்த மருத்துவரும், ஜிம் பயிற்சியாளருமான ஒருவர் 33 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரேசில் நாட்டை சேர்ந்தவர் ருடால்ப் துவார்த் ரிபெய்ரோ டாஸ் சான்டோஸ் (33). இவர், மருத்துவராகவும், ஜிம் பயிற்சியாளராகவும் இருந்து வந்துள்ளார்.

மேலும், இவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளமான இன்ஸ்ட்டாகிராமில் பகிர்ந்து பிரபலமாகியுள்ளார்.அதுமட்டுமல்லாமல், மருத்துவம் தொடர்புடைய வீடியோக்களையும் பதிவிட்டு வந்துள்ளார். இவரிடம் சில பயனர்கள் இன்ஸ்டாகிராம் வழியே ஆலோசனை கேட்டும் வந்துள்ளனர்.

இந்த நிலையில், இவர் ஸ்டீராய்டு வகை மருந்துகளை உட்கொண்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு மருத்துவமனையில் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், சிகிச்சை பெற்று வந்துள்ள ஜிம் பயிற்சியாளர் டாஸ் சான்டோஸ் உயிரிழந்துள்ளார்.

இவரது உயிரிழப்பிற்கு காரணம் மாரடைப்பு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு சாஞ்செஸ் என்ற பெண்ணுடன் இவருக்கு திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது. வருங்கால கணவரின் மறைவிற்கு கிடார் வாசித்து பாடல் பாடி சோகத்தை சாஞ்செஸ் வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.