நடுவானில் நடந்த திருமணம்.. விமானத்தை மணவறையாக மாற்றிய வியாபாரி!!

482

இந்தியாவில்…

இந்திய தொழிலதிபர் ஒருவர், தனது மகளின் திருமணத்தை தனியார் ஜெட் விமானத்தில் நடத்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி வருகின்றது.

அமீரகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் திலீப் பாப்லியின் மகள் விதி பாப்லி (Vidhi Popley),ஹ்ரிதேஷ் சைனானி (Hridesh Sainani) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் கடந்த நவம்பர் 24-ம் திகதி துபாயில் தனிப் பயனாக்கப்பட்ட “போயிங் 747 ” என்ற விமானத்தில் ஜெடெக்ஸ் தனியார் முனையில் இடம்பெற்றுள்ளது.

மேலும் விமானம் என்பதால் குறிப்பிட்ட சிலரை மாத்திரம் திருமணத்திற்கு அழைத்துள்ளனர். அதாவது நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் உட்பட ஏறத்தாழ 350 விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் போது சரியாக , 28 ஆண்டுகளுக்கு முன்பு, திலீப் பாப்லியின் திருமணமும் இப்படி தான் இடம்பெற்றுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

இந்த திருமணம் திருமணம் ஏர் இந்தியா (Air India) விமானத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் Popley & Sons Jewellers Private Limited என்கிற தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை நிலையங்களின் மதிப்புமிக்க வலையமைப்பிற்கு பெயர் பெற்ற குடும்பமாக பார்க்கப்படுகின்றது.

திருமணம் சரியாக 3 மணித்தியாலங்கள் நடைப்பெற்றுள்ளது. இதில் விருந்தினர்களுக்கு உணவும் வழங்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.