ஒடிசாவில்..
சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்த வகையி ஒடிசா மாநிலத்தில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து பட்டியலின பெண்ணை 31 துண்டுகளாக வெட்டி புதைத்துள்ளனர்.
ஒடிசாவில் நகரங்பூர் மாவட்டம் முருமதிஹி கிராமத்தில் வசித்து வந்த 21 வயதான பட்டியலினப் பெண் திலாபாய் புதன்கிழமை முதல் காணாமல் போனார். இதன் பெயரில் பாப்பாடஹண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை முருமதிஹி வனப்பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவரின் உடல் வெட்டப்பட்டு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீஸார் இளம்பெண் ஒருவரின் உடல் 31 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், உயிரிழந்த பெண் மாயமான திலாபாய் என்பது தெரியவந்தது.
உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திலாபாயின் உடல் பாகங்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அத்துடன் திலாபாயை கொலை செய்தது அதே பகுதியைச் சேர்ந்த சந்திரராட் மற்றும் அவரது மனைவி ஷியா என்பதும் உறுதி செய்யப்பட்டது.
சந்திர ராட்டுக்கும், திலாபாய்க்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்தது. இதனையடுத்து கடந்த புதன்கிழமை வீட்டிலிருந்து வெளியேறி சந்திர ராட்டின் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார். அந்த சமயத்தில் அவரது மனைவி ஷியாவும் இருந்துள்ளார்.
இதனால் சந்திரராட் அவரை திருமணம் செய்ய முடியாது எனக் கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் இனி தான் வீட்டுக்கு செல்ல போவதில்லை எனவும் சந்திர ராட்டின் வீட்டிலேயே இருக்கப் போவதாகவும், திலாபாய் கூறிவிட்டார்.இதனால் கணவன் மனைவி இருவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆத்திரத்தில் கூர்மையான கத்தியால் திலாபாயை தாக்கியுள்ளனர்.