தர்மபுரியில்..
தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வருபவர் அரவிந்தன். இவர் கர்நாடக மாநிலத்தில் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் அபிநயாவும் காதலித்து கடந்த 8 மாதத்திற்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
திருமண வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டிருந்தது. இதன் அடையாளமாக தற்போது அபிநயா நான்கு மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலம் மைசூரில் வசித்து வருகின்றனர். சொந்த ஊர் செல்லலாம் என முடிவு செய்து இருவரும் நேற்று இரவு பைக்கில் அரவிந்தனும், அபிநயாவும் தர்மபுரிக்கு சென்று கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் கிருஷ்ணகிரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டேம் கூட்ரோட்டுக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்தத். இதனால் பைக் சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்ட தடுப்பில் மோதி கோரவிபத்து ஏற்பட்டது.
இதில் அரவிந்தனும் அபிநயாவும் தூக்கி வீசப்பட்டனர். இதனால் இருவரது தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலியே இருவரும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.